- அஜித் குமார்
- அப்பல்லோ
- மருத்துவமனை
- சென்னை
- அப்பல்லோ மருத்துவமனை
- அஜித்
- மகில் திருமணியின் '
- திரிஷா
- லைக்கா
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் மே மாதம் திரைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித் அஜர்பைஜான் செல்ல உள்ளார்.
இந்நிலையில் சென்னை அப்பலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் அஜித்குமார் இன்றே வீடு திரும்புவார். விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில் நடிகர் அஜித்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மேலாளர் சுரேஷ் சந்திரா; வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனை சென்றுள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜித்குமார் அஜர்பைஜான் செல்ல உள்ளார். அஜர்பைஜானில் வரும் 15ம் தேதி நடைபெறும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என்று கூறினார்.
The post சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் அனுமதி appeared first on Dinakaran.